< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்
|5 Sept 2023 9:30 PM IST
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் தலைமை தாங்கினார். வாக்காளர் பதிவு அதிகாரிகளான ஜான்சன், சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள். 1,500 பேருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பது சம்பந்தமாகவும் மற்றும் பெயர்கள் மாற்றம் சம்பந்தமாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.