< Back
புதுச்சேரி
ரூ.16 கோடியில் சாலை, பாலம் அமைக்கும் பணி
புதுச்சேரி

ரூ.16 கோடியில் சாலை, பாலம் அமைக்கும் பணி

தினத்தந்தி
|
28 Aug 2023 10:09 PM IST

கிருமாம்பாக்கம், பாகூர் பகுதியில் ரூ.16 கோடியில் சாலை, பாலம் அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

பாகூர்

ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் முதல் ஆதிங்கப்பட்டு வரை, பிள்ளையார்குப்பத்திலிருந்து பின்னாச்சிகுப்பம் வரை உள்ள 2 முக்கிய சாலைக்கு நபார்டு வங்கியின் கடன் மூலம் ரூ.3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இதுபோல பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம், சோரியாங்குப்பம், இருளன்சந்தை கிராமங்களுக்கான சுடுகாட்டு பாலம் ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. சாலைப்பணி மற்றும் சுடுகாட்டு பாலம் அமைப்பதற்கான பூமிபூஜையை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

இதேபோல் சோரியாங்குப்பம், கன்னியக்கோவில், மேல்பரிக்கல்பட்டு, கொமந்தான்மேடு, குருவிநத்தம், முள்ளோடை, புத்துக்கோவில் உள்ளிட்ட இடங்களில் ரூ.12 கோடியே 50 லட்சம் நிதியில் சாலை அமைப்பதற்கான பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார், தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், சந்திரகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்