< Back
புதுச்சேரி
புதுச்சேரி
பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி
|23 July 2023 10:56 PM IST
பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது.
பாகூர்
விழுப்புரம்-புதுச்சேரி-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை ரூ.6 ஆயிரத்து 431 கோடி செலவில் 4 வழிச்சாலையாக அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாகூர்-கன்னியக் கோவில் சாலை இடையே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக 3 ராட்சத கிரேன் மற்றும் லாரிகள் மூலம் கான்கிரீட் தடுப்புகள் எடுத்து வரப்பட்டு மேம்பாலத்தில் பொருத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இதனால் பாகூர்-கன்னியக்கோவில் சாலையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் ஆபத்தை உணராமல் கார், மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். இதனை வேடிக்கை பார்க்கவே கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்கின்றனர்.