< Back
புதுச்சேரி
ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி
புதுச்சேரி

ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி

தினத்தந்தி
|
10 Aug 2023 9:42 PM IST

புதுவையில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்

வில்லியனூர்

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட வி.மணவெளி தாங்கல், மகாசக்தி நகர், வி.ஐ.பி.நகர், சவுபாக்கியா நகர், தயாநிதி நகர், பாலாஜி நகர், அன்னை இந்திரா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக புதிய ஆழ்குழாய் கிணறு, நீர்மூழ்கி மோட்டார் மற்றும் அதனை சார்ந்த பணிகளுக்கு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் மூலம் ரூ.14 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தொடக்க விழா வி.மணவெளி தாங்கலில் இன்று நடந்தது.

நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா கலந்துகொண்டு புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், பொதுசுகாதார கோட்ட உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் ஞானவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்