< Back
புதுச்சேரி
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
28 Nov 2022 4:57 PM GMT

மாணவர் சிறப்பு பஸ்சை இயக்கக்கோரி காங்கிரசார்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் சாரம் அரசு தொடக்கப் பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாணவர்களுக்கான சிறப்பு பஸ்சை இயக்க வேண்டும், பள்ளி சீருடை வழங்க வேண்டும், இலவச நோட்டு, புத்தகம், சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை, மதிய உணவில் முட்டை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களை அலட்சிப்படுத்தும் பா.ஜ.க. மற்றும் என்.ஆர். காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் காமராஜர் நகர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்