< Back
புதுச்சேரி
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
3 Jan 2023 9:45 PM IST

பாண்லே பால் தட்டுப்பாட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுவையில் கடந்த சில நாட்களாக பாண்லே பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் புதுவை காமராஜர் சாலையில் உள்ள பாண்லே பால் விற்பனை நிலையம் முன்பு இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், புதுவையில் தட்டுப்பாடு இன்றி மதுபானம் கிடைக்கும் நிலையில் காசு கொடுத்தும் பால் கிடைப்பதில்லை என்று அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அனந்த ராமன், காங்கிரஸ் கட்சி சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்