< Back
புதுச்சேரி
புதுச்சேரி
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|9 Oct 2023 11:17 PM IST
புதுவையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தியை இழிவுபடுத்தும் வகையில் அவருடைய புகைப்படத்தை தவறான முறையில் சித்தரித்து போஸ்டர் வெளியிட்ட பா.ஜ.க.வை கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று இந்திராகாந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ரமேஷ் பிரம்பத் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், நீலகங்காதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் காங்கிரசார், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கும், பா.ஜ.க.வும் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.