< Back
புதுச்சேரி
புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|30 Jun 2023 11:37 PM IST
மதகடிப்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருபுவனை
சிலிண்டர் மானியம் ரூ.300 வழங்க வேண்டும், மூடிய ரேஷன் கடையை திறக்க வேண்டும், முதியோர், விதவை பென்சன் பாகுபாடு காட்டுவதை கைவிட வேண்டும், மதகடிப்பட்டு பிரதான கடைவீதியில் சாலை மற்றும் கால்வாய் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மதகடிப்பட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.கட்சிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். வினாயகம், வக்கீல் தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ராஜாங்கம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் சீனுவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.