< Back
புதுச்சேரி
புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|22 March 2023 10:07 PM IST
புதுச்சேரி இந்திராகாந்தி சிலை அருகே சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலையை மேம்படுத்துவதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
புதுச்சேரி இந்திராகாந்தி சிலையில் இருந்து, அரும்பார்த்த புரம் வரை சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மேம்படுத்துவதால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை கண்டித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உழவர்கரை தொகுதி சார்பில் இன்று இந்திராகாந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, நிர்வாக குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், துணை செயலாளர் எரிக்ரம்போ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.