< Back
புதுச்சேரி
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
2 Aug 2023 11:13 PM IST

புதுவை ரெயின்போ நகர் காமாட்சி அம்மன்கோவில் நில மோசடி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி

புதுவை ரெயின்போ நகர் காமாட்சி அம்மன்கோவில் நில மோசடி தொடர்பாக ஜான்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட பதிவாளராக இருந்த ரமேஷ், தாசில்தாராக இருந்த பாலாஜி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரெயின்போ நகர் மெயின்ரோட்டில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காமராஜ் நகர் தொகுதிக்குழு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி துணை செயலாளர் தயாளன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், துணை செயலாளர் சேதுசெல்வம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தொகுதிக்குழு உறுப்பினர் மோகன்தாஸ், ஜீவஜோதி, கமலக்கண்ணன், பொருளாளர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்