< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
|14 Jun 2023 9:55 PM IST
காரைக்காலில் கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு.
காரைக்கால்
காரைக்கால் வலத்தெருவில் வசித்து வருபவர் கார்த்தி (வயது38). மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர். இவருக்கும், சத்யா என்பவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது.
இது குறித்து காரைக்கால் நகர போலீசில் கார்த்தி புகார் தெரிவித்தார். இந்த நிலையில் தன் மீதே போலீசார் வழக்கு போட்டு விசாரிப்பதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன் பாட்டிலில் கொண்டு வந்த டீசலை, உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று கார்த்தி மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.