< Back
புதுச்சேரி
புதுச்சேரி
தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடக்கம்
|4 Sept 2023 10:55 PM IST
புதுவை மேல்நிலை எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி தொடங்கியது.
புதுச்சேரி
புதுவை அரசு நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணியிடங்கள் (யு.டி.சி.) கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி மாநிலம் முழுவதும் 133 மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 38 ஆயிரத்து 67 பேர் எழுதினர். தேர்வு முடிகள் ஜூலை 27-ந் தேதி வெளியிடப்பட்டது.
மேல்நிலை எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதுவை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் இன்று நடந்தது. இதில் மேல்நிலை எழுத்தர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பிறப்பு, கல்வி, இருப்பிடம், சாதி சான்றிதழ்கள் போன்றவற்றை அதிகாரிகள் சாரிப்பார்த்தனர். இந்த பணி நாளை மறுநாள் (புதன்கிழமை) , (வியாழக்கிழமை) வரை நடக்கிறது.