வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
|புதுவையில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி
புதுவை பல்கலைக்கழக கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தும்போது, அதில் பருவ தேர்வுகளில் தமிழ் பாடம் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாகூர் கல்லூரி மாணவ-மாணவிகள இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாணவர் கூட்டமைப்பு மாநில தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தமிழரசன், துணை செயலாளர் மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் வருகிற 12-ந் தேதி புதிய கல்விக்கொள்கையை கைவிடக்கோரி அனைத்து கல்லூரி மாணவர்களும் மாநிலம் தழுவிய அளவில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.