< Back
புதுச்சேரி
கல்லூரி மாணவி மாயம்
புதுச்சேரி

கல்லூரி மாணவி மாயம்

தினத்தந்தி
|
31 Aug 2023 9:55 PM IST

வில்லியனூர் அருகே கல்லூரி மாணவி மாயமானார்.

வில்லியனூர்

வில்லியனூர் ஆனந்தபுரம் பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பவித்ரா (வயது 19), புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டு சென்ற பவித்ரா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து ஆறுமுகம் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்