< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கல்லூரி மாணவி மாயம்
|5 Aug 2023 9:36 PM IST
அரியாங்குப்பம் அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
அரியாங்குப்பம்
அரியாங்குப்பம் தேங்காய்திட்டு வீதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (40). இத்தம்பதியின் இளைய மகள் கீர்த்தி (19). இவர் புதுச்சேரி பாரதிதாசன் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலையில் கல்லூரி செல்வதாக சென்ற கீர்த்தி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை கல்லூரியிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடி கிடைக்காததால், அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தாயார் விஜயலட்சுமி புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி கீர்த்தியை தேடி வருகிறார்.