மரக்கிளை முறிந்து விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம்
|பாகூர் அருகே மரக்கிளை முறிந்து விழுந்து கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்தார்.
பாகூர்
பாகூர் அடுத்த கொமந்தான்மேடு வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. அவரது மகன் ராஜேஷ் (வயது 22). லாஸ்பேட்டை அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதியம் ராஜேஷ் வீட்டின் முன்பு மரத்தின் நிழலில் கட்டில் போட்டு படுத்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் மரத்தின் கிளை முறிந்து அவர் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பழமையான இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தக்கோரி பலமுறை கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.