< Back
புதுச்சேரி
கல்லூரி மாணவர் படுகாயம்
புதுச்சேரி

கல்லூரி மாணவர் படுகாயம்

தினத்தந்தி
|
8 Dec 2022 9:37 PM IST

மூலக்குளம் அருகே நடந்த விபத்தில் கல்லூாி மாணவர் படுகாயம் அடைந்தார்.

மூலக்குளம்

மூலக்குளம் அரும்பார்த்தபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 20). இவர் தாகூர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர், புதுவை-விழுப்புரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மூலக்குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த மணிமாறனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்