கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
|பார்மசி படிக்க விருப்பம் இல்லாததால் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால்
பார்மசி படிக்க விருப்பம் இல்லாததால் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கல்லூரி மாணவர்
காரைக்கால் அன்பு நகரை சேர்ந்தவர் லூர்து தாஸ். இவருடைய மகன் அருள்பெனடிக் (வயது 19). நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பார்மசி படித்து வந்தார்.
அவருக்கு பார்மசி படிக்க விருப்பம் இல்லை என்று தனது பெற்றோரிடம் கடந்த சில நாட்களாக அவர் கூறி வந்தார். அதற்கு தந்தை லூர்துதாஸ் விரைவில் வேறு படிப்பில் சேர நடவடிக்கை எடுக்கிறேன் என கூறியுள்ளார்.
பெற்றோர் வெளியூர் பயணம்
இந்தநிலையில் நேற்று லூர்துதாஸ், தனது மனைவி அண்ணமேரி, 2-வது மகன் யுவராஜ் ஆகியோருடன் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்று விட்டார். அருள்பெனடிக்கை அழைத்தபோது, தனக்கு படிப்பு தொடர்பாக வேலை இருப்பதாக கூறி வீட்டிலேயே தனிமையில் இருந்துள்ளார்.
வெளியூரில் இருந்தபடி லூர்துதாஸ் அருள்பெனடிக்கை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால்மகனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அருள்பெனடிக் நண்பர்களை தொடர்பு கொண்ட அவர், தனது மகன் போனை எடுக்கவில்லை எனவே வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
தூக்கில் தொங்கினார்
அதன்பேரில் நண்பர்கள் சென்று பார்த்தபோது, அருள்பெனடிக் வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தொங்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், கதவை உடைத்து அருள்பெனடிக்கை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி அருள்பெனடிக் நண்பர்கள் லூர்துதாசுக்கு தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சிஅடைந்த அவர் காரைக்காலுக்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பார்மசி படிப்பு படிக்க விருப்பம் இல்லாமல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.