பராமரிப்பு பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
|நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிப்பு பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
நெடுங்காடு
நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடங்கள் பழுதானதாக பல்வேறு புகார்கள் வந்தது. அதன்பேரில், மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் இன்று சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கட்டிடம் பராமரிப்பு நடந்து கொண்டிருந்தது. இதில் நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் சிவராஜ்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிதம்பரநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பகுதி முழுவதையும் பார்வையிட்ட கலெக்டர், உடனடியாக கட்டிட பராமரிப்பு பணிகளை செய்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் நோயாளிகளுக்கு போதுமான மருந்து மாத்திரைகள் இருப்பில் வைத்துக் கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டார். மேலும் பொதுமக்களிடம் இருந்து எந்த புகாரும் வராத வண்ணம் பணி செய்யுமாறு அங்கு பணியில் இருந்த டாக்டர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.