< Back
புதுச்சேரி
கடலோர காவல்படையினர் நடைபயணம்
புதுச்சேரி

கடலோர காவல்படையினர் நடைபயணம்

தினத்தந்தி
|
29 July 2023 9:24 PM IST

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை சார்பில் நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது.

காரைக்கால்

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை சார்பில் நடைபயணம் நிகழ்ச்சி நடந்தது. கடலோர காவல்படை தலைவர் ஜெயஸ்ரீ விஜய் தலைமை தாங்கினார். இதில் கடலோர காவல்படை அதிகாரிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரைக்கால் கடலோர காவல் படை தலைமை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த நடைபயணம் காரைக்கால் அம்பாள் சத்திரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரை சுமார் 2 கி.மீ. நடைபயிற்சி நடந்தது. 

நடைபயிற்சியின்போது எதிர்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், உள்ளூர் மக்களிடையே நட்புறவு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்