< Back
புதுச்சேரி
கடலோர காவல்படை வீரர்கள் ரத்ததானம்
புதுச்சேரி

கடலோர காவல்படை வீரர்கள் ரத்ததானம்

தினத்தந்தி
|
14 Jun 2023 11:40 PM IST

புதுவை அரசு ஆஸ்பத்திரியில் கடலோர காவல்படை வீரர்கள் ரத்ததானம் செய்தனர்.

புதுச்சேரி

உலக ரத்ததானம் செய்வோர் தினத்தை முன்னிட்டு இந்திய கடலோர காவல்படையின் சார்பில் ரத்ததானம் செய்யும் நிகழ்ச்சி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. நிகழ்ச்சியில் கடலோர காவல்படை கமாண்டர் அன்பரசன் கலந்துகொண்டு ரத்ததானத்தை தொடங்கிவைத்து, ரத்ததானம் செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் கடலோர காவல்படை வீரர்கள் 25 பேர் ரத்ததானம் செய்தனர். உதவி கமாண்டர் வருண், டாக்டர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்