< Back
புதுச்சேரி
கடலோர காவல்படையினர் தூய்மைப்பணி
புதுச்சேரி

கடலோர காவல்படையினர் தூய்மைப்பணி

தினத்தந்தி
|
16 Sept 2023 11:13 PM IST

இந்திய கடலோர காவல்படையினர், தன்னார்வலர்கள் சேர்ந்து பாண்டி மெரினா கடற்கரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

புதுவை கடற்கரை பகுதிக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அத்தகைய கடற்கரையில் பிளாஸ்டிக் மற்றும் மக்காத கழிவுகள் குவிந்து வருகின்றன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

கடலோர மற்றும் கடற்கரைகளின் சீரழிவை குறைப்பதற்காகவும், உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்திய கடலோர காவல்படையினர் தன்னார்வலர்களுடன் சேர்ந்து பாண்டி மெரினா கடற்கரையில் இன்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்