< Back
புதுச்சேரி
கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணி
புதுச்சேரி

கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணி

தினத்தந்தி
|
3 Oct 2023 12:20 AM IST

காரைக்காலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணி நடைபெற்றது.

காரைக்கால்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மையே சேவை என்ற பெயரில் புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காரைக்கால் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வக்கீல் திருமுருகன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயலாளர் சிவக்குமார், தெற்கு தொகுதி தலைவர் பார்த்திபன், செயலாளர் செழியன், வடக்கு தொகுதி துணை செயலாளர் வின்சென்ட் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்