< Back
புதுச்சேரி
துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி

துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

தினத்தந்தி
|
5 Sept 2023 10:23 PM IST

திருக்காஞ்சி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

வில்லியனூர்

வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் குப்பை சேகரிக்கும் பணியில் 'எச்.ஆர்.ஸ்கொயர்' என்ற நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. வாரத்தில் ஒரு நாள் 'கிளீன் புதுச்சேரி, கிரீன் புதுச்சேரி' என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியில் ஊழியர்கள் ஈடுபட வேண்டும் என கொம்யூன் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நரேந்திரன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் இன்று மங்கலம் தொகுதி திருக்காஞ்சி கிராமத்தில் சிறப்பு துப்புரவு பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊா்வலம் நடந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருக்காஞ்சி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற துப்புரவு பணியாளர்கள், குப்பைகளை வீதியில் கொட்ட வேண்டாம் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் கிராமத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதில் வில்லியனூர் கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், திருக்காஞ்சி தேவஸ்தான தனி அதிகாரி சீதாராமன், சீனியர் மேற்பார்வையாளர் விக்னேஷ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்