< Back
புதுச்சேரி
புதுச்சேரி
வாஜ்பாய் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை
|16 Aug 2023 9:48 PM IST
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாள், புதுவை அரசு சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி புதுவை சட்டசபை வளாகத்தில் வாஜ்பாயின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. படத்துக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க் கள் பாஸ்கர், வி.பி.ராமலிங்கம், லட்சுமிகாந்தன், அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் ஆகியோரும் கலந்துகொண்டு வாஜ்பாய் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்கள்.