< Back
புதுச்சேரி
புதுச்சேரி
முதல்-அமைச்சர் ரங்கசாமி கோவா முதல்-மந்திரிக்கு வாழ்த்து
|21 Sept 2023 10:34 PM IST
முதல்-அமைச்சர் ரங்கசாமி கோவா முதல்-மந்திரிக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவா மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதோடு நல்ல ஆரோக்கியம், சந்தோசத்துடன் வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.