< Back
புதுச்சேரி
புதுச்சேரி
அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலிகள்
|6 Aug 2023 10:21 PM IST
ஊசுடு தொகுதியில் அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலிகளை அமைச்சர் சாய்.சரவணன்குமார் வழங்கினார்.
வில்லியனூர்
பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியை முன்னிட்டு் ஊசுடு தொகுதியில் உள்ள 31 அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊசுடு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்துகொண்டு 31 அங்கன்வாடி மையங்களுக்கு நாற்காலிகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் தியாகராஜன் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பா.ஜ.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பத்துக்கண்ணு முதல் கூடப்பாக்கம் வரை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை அமைச்சர் தொடங்கிவைத்தார். புளியமரம், நாவல், சிவந்தன்யா, மா, இலுப்பை, கொன்றை, மகிழம் உள்பட பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டன.