< Back
புதுச்சேரி
கணவருடன் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
புதுச்சேரி

கணவருடன் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

தினத்தந்தி
|
25 Oct 2023 11:32 PM IST

மோட்டாா் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்து வாலிபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

வில்லியனூர்

வில்லியனூர் வெண்ணிசாமி நகரை சேர்ந்தவர் அமுதன் (வயது 64). இவருடைய மனைவி கீதா (58). இவர்கள் இருவரும் நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மயிலம் முருகன் கோவிலுக்கு சென்றனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.வானூர் தீயணைப்பு நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர்கள், கீதா அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அமுதன், கீதா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வானூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்துச்சென்ற வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்