< Back
புதுச்சேரி
புதுச்சேரி
சான்றிதழ் சரிபார்ப்பு 5 நாட்கள் நடக்கிறது
|7 Sept 2023 11:25 PM IST
இளநிலை எழுத்தர், பண்டக காப்பாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 5 நாட்கள் நடக்கிறது
புதுச்சேரி
புதுவை அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் 157 இளநிலை எழுத்தர் (எல்.டி.சி.), 52 பண்டக காப்பாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20, 21, 22, 25, 26-ந்தேதிகளில் தலைமை செயலக 3-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நடக்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ், பொருளாதாரத்தின் பின்தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கான பிரிவினர் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும் என்று நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.