< Back
புதுச்சேரி
சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது
புதுச்சேரி

சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியது

தினத்தந்தி
|
26 Jun 2023 11:44 PM IST

புதுவையில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புபணி தொடங்கியது.

புதுச்சேரி

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 253 (ஆண்கள்-170, பெண்கள்-83) காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக உடல் தகுதித்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான எழுத்துத்தேர்வு இம்மாதம் 4-ந் தேதி நடைபெற்றது. இதில் 2,066 ஆண்கள், 1,002 பெண்கள் என மொத்தம் 3,068 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புபணி கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 112 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். போலீஸ் அதிகாரிகள் அவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

அப்போது பிறப்பு, கல்வித்தகுதி, சாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் தேர்வு நுழைவு சீட்டு ஆகியவை சரிபார்க்கப்பட்டது. நாளை (செவ்வாய்க்கிழமை) 112 பேருக்கும், வியாழக்கிழமை26 பேருக்கும் சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்