< Back
புதுச்சேரி
புதுச்சேரி
மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு சான்றிதழ்
|1 Sept 2023 10:12 PM IST
காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் 23 பேருக்கு சட்டரீதியான பாதுகாவலர் சான்றிதழ் வழங்கப்பட்டது.
காரைக்கால்
இந்திய அரசு தேசிய அறக்கட்டளை மூலம், 18 வயது நிரம்பிய மூளை வளர்ச்சி குன்றியோர், ஆட்டிசம், மூளை முடக்குவாதம் மற்றும் பலவகை ஊனம் உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற, சட்டரீதியான பாதுகாவலர் சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த 23 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டரும் தேசிய அறக்கட்டளையின் தலைவருமான குலோத்துங்கன் இன்று கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். நிகழ்ச்சியில் சமூகநலத்துறையின் துணை இயக்குனர் தன்ராஜ், உதவி இயக்குனர் ராஜேந்திரன், நல அதிகாரி சுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.