< Back
புதுச்சேரி
வெளிமாநில மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு
புதுச்சேரி

வெளிமாநில மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு

தினத்தந்தி
|
30 Sept 2023 10:50 PM IST

புதுச்சேரி

புதுவையில் உள்ள கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சுமார் 23 இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வு காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் இன்று நடந்தது.

இந்த கலந்தாய்வில் வெளிமாநிலங்களை சேர்ந்த 120 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 23 பேருக்கு இடம் கிடைத்தது. அவர்கள் தங்களது விருப்ப பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வு செய்தனர்.

மேலும் செய்திகள்