< Back
புதுச்சேரி
சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு விவரம் ஆன்லைனில் வெளியீடு
புதுச்சேரி

சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு விவரம் ஆன்லைனில் வெளியீடு

தினத்தந்தி
|
14 Sept 2023 11:06 PM IST

முதுநிலை மருத்துவ படிப்புக்கான சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு விவரத்தை ஆன்லைனில் வெளியீட்டுள்ளது.

புதுச்சேரி

புதுச்சேரியில் சென்டாக் மூலம் எம்.பி.பி.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி முதுநிலை படிப்புக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில், முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான (எம்.டி., எம்.எஸ்.) 2-ம் கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடம் கிடைத்தவர்கள் விவரம் www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 2-ம் சுற்று கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மருத்துவ படிப்புக்கான கல்விக்கட்டணத்தை ஆன்லைன் மூலமாக சென்டாக் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். பின்னர் அந்தந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம் சென்டாக் அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புதுச்சேரி சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்