< Back
புதுச்சேரி
ரூ.34¾ லட்சத்தில் சிமெண்டு சாலை பணி
புதுச்சேரி

ரூ.34¾ லட்சத்தில் சிமெண்டு சாலை பணி

தினத்தந்தி
|
30 Aug 2023 11:29 PM IST

ரூ.34¾ லட்சத்தில் சிமெண்டு சாலை பணியை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

வில்லியனூர்

வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட வசந்த நகரில் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ.34 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் சிமெண்டு குறுக்கு சாலைகள் சீரமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் சத்தியநாராயணா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்