செல்போன் திருடியவர் கைது
|கட்டிட தொழிலாளியிடம் செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
மயிலாடுதுறை ரேகாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டிதுரை (வயது 33). புதுவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், உருளையன்பேட்டை பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அங்கு அவர் தனது செல்போனை மேஜை மீது வைத்து விட்டு கை கழுவ சென்றார். திரும்பி வந்து பார்த்த போது செல்போனை காணவில்லை. இது குறித்து அவர் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே பாண்டிதுரை நேற்று முன்தினம் மீண்டும் அதே ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அவரது செல்போன் காணாமல் போன அன்று அவரது அருகில் இருந்து சாப்பிட்ட நபர் அந்த வழியாக சென்றார். பாண்டிதுரையை பார்த்தவுடன் அந்த நபர் ஓட்டம் பிடித்தார். சந்தேகம் அடைந்த பாண்டிதுரை, அவரை பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் முதலியார்பேட்டையை சேர்ந்த மரி ஜோசப் கிறிஸ்டோபர் (48) என்பதும், பாண்டிதுரையின் செல்போனை திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் செல்போனையும் மீட்டனர்.