< Back
புதுச்சேரி
கைலாசநாதர் கோவிலில் விடையாற்றி உற்சவம்
புதுச்சேரி

கைலாசநாதர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

தினத்தந்தி
|
1 Aug 2023 9:42 PM IST

மாங்கனி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோவிலில் விடையாற்றி உற்சவம் இன்று நடந்தது.

காரைக்கால்

காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நடைபெறும் இந்த விழாவில் திருக்கல்யாணம், பிச்சாண்டவர் வீதியுலா, மாங்கனி இறைப்பு, அமுது படையல் மற்றும் புஷ்ப பல்லக்கு ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன.

தொடர்ந்து விழா நாட்களில் அம்மையார் மணிமண்டபத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாங்கனி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான விடையாற்றி உற்சவம் இன்று காலை நடந்தது.

கைலாசநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் பிரகார புறப்பாடு நடந்தது. அம்மையாரும் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பிரகாரத்தை சுற்றிவந்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அலுவலர்கள், அறங்காவல் குழுவினர் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்