< Back
புதுச்சேரி
மதுபானம் விற்ற 2 பேர் மீது வழக்கு
புதுச்சேரி

மதுபானம் விற்ற 2 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
2 Oct 2023 11:02 PM IST

புதுச்சேரியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 2 பேரிடம் இருந்து மதுபானங்களை கலால்துறையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 2 பேரிடம் இருந்து மதுபானங்களை கலால்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகள், கள் மற்றும் சாராயக்கடைகளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூட வேண்டும் என கலால்துறையினர் உத்தரவிட்டனர். அதன்படி அனைத்து மது, கள் மற்றும் சாராயக்கடைகள் மூடப்பட்டன. இந்தநிலையில் புதுவையின் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபான பாட்டில்கள் விற்பனை நடந்தது.

மதுபானங்கள் விற்பனையை தடுக்க கலால்துறையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி தாசில்தார் சிலம்பரசன், துணைதாசில்தார்கள் தேவதாஸ், சிவசங்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் புதுச்சேரி, அரியாங்குப்பம் மண்ணாடிப்பட்டு, வில்லியனூர், பாகூர், நெட்டப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடி ஆய்வு நடத்தினார்கள்.

2 பேர் மீது வழக்கு

அப்போது அரியூர், பிள்ளையார்குப்பம், மடுகரை, கரிக்கலாம்பாக்கம், பனையடிக்குப்பம், மணமேடு, திருக்கனூர் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானம் விற்ற 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து 40 லிட்டர் மதுபானம், 34 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.18 ஆயிரம்.

மேலும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற 2 பேரிடம் இருந்து அபராதமாக ரூ.20 ஆயிரம் பெறப்பட்டு அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.

மேலும் செய்திகள்