< Back
புதுச்சேரி
6 பேர் மீது வழக்குப்பதிவு
புதுச்சேரி

6 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
24 Aug 2023 9:32 PM IST

புதுவையில் சொத்து பிரச்சினையில் மோதிக்கொண்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

லாஸ்பேட்டை

லாஸ்பேட்டையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 54). அவரது தம்பி பிரபாகரன் (50). இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரு குடும்பத்தினரும் கோஷ்டிகளாக மோதி கொண்டனர். ஒருவரையொருவர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் மீது லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்