< Back
புதுச்சேரி
4 பேர் மீது வழக்குப்பதிவு
புதுச்சேரி

4 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
19 July 2023 10:23 PM IST

கிருமாம்பாக்கம் அருகே சவ ஊர்வலத்தில் மோதலில் ஈடுப்பட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பாகூர்

கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு, ஈச்சங்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் இடையே முன்விரோதம்இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் பனித்திட்டு பகுதிக்கு சென்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பனித்திட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 50 பேர் மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டு சென்று ஈச்சங்காடு கிராமத்தில் முதியவரின் சவ ஊர்வலத்தில் புகுந்து, ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் வீடுகளின் மீதும் கல்வீசினர்.

இந்த சம்பவத்தால் இரு கிராமங்கள் இடையே பதற்றம் ஏற்பட்டது. இதை தணிக்க போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 2-வது நாளாக இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் பிரசாந்த் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்