< Back
புதுச்சேரி
புதுச்சேரி
ஆட்டோ டிரைவரை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
|26 Jun 2023 11:59 PM IST
அரியாங்குப்பம் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய தந்தை, மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அரியாங்குப்பம்
முருங்கப்பாக்கம் ஒட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 37). ஆட்டோ டிரைவர். இவர் அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் வந்தபோது ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த நோணாங்குப்பம் புது நகரை சேர்ந்த வீரபத்திரன், வெங்கடேசனிடம் தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. தகவல் அறிந்த வீரபத்திரனின் மகன் கவுதமன் அங்கு வந்தார். அவர் தனது தந்தையுடன் சேர்ந்து வெங்கடேசனை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். தாக்குதலில் காயமடைந்த வெங்கடேசன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தந்தை, மகனை வலைவீசி தேடி வருகின்றனர்.