< Back
புதுச்சேரி
புதுச்சேரி
கடைக்காரர் மீது வழக்கு
|28 Jun 2023 10:52 PM IST
காரைக்கால் அருகே போதைப்பொருள் விற்பனை செய்த கடைக்காரர் மீது பொலீசார் வழக்கு செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது காரைக்கால் வலத்தெருவில் ஒரு மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், கூலிப்ஸ் விற்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அக்கடையில் போலீசார் சோதனை செய்து போதைபொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர் அருணகிரி (வயது 52) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.