< Back
புதுச்சேரி
புதுச்சேரி
உருவ பொம்மை எரித்த பா.ஜ.க.வினர் மீது வழக்கு
|13 Oct 2023 9:52 PM IST
காரைக்காலில் கர்நாடக முதல்-மந்திரியின் உருவ பொம்மை எரித்த பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்..
காரைக்கால்
காரைக்கால் மாவட்டத்திற்கான காவிரி நீரை தரமறுக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து காரைக்கால் புதிய பஸ் நிலையம் எதிரே, நேற்று பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாவட்ட தலைவர் சேனாதிபதி தலைமையில் திடீரென கர்நாடகா முதல்-மந்திரியின் உருவ பொம்மையை எரித்தனர்.
அந்த உருவபொம்மையை போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர், இது குறித்து போலீஸ் ஏட்டு சாமிநாதன் நகர போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறாகவும் உருவபொம்மையை எரித்ததாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் சேனாதிபதி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.