< Back
புதுச்சேரி
மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
புதுச்சேரி

மீனவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

தினத்தந்தி
|
28 Jun 2023 10:25 PM IST

வீராம்பட்டினம் அருகே மீனவரை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அரியாங்குப்பம்

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் பழைய தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 32). மீனவர். கடந்த சில நாட்களுக்கு முன் சுருக்குவலை பிரச்சினை தொடர்பாக வீராம்பட்டினம் கோயில் வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலைவாணனின் உறவினர் ராமுவை ஊர்க்குழுவில் இருப்பவர்கள் மன்னிப்பு கேட்க சொன்னதாக கூறப்படுகிறது. அதற்கு கலைவாணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த வேலவன், கார்த்திக் ஆகிய 2 பேரும் சேர்ந்து கலைவாணனை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் அளித்த புகாரின்பேரில் வேலவன், கார்த்திக் ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்