< Back
புதுச்சேரி
புதுச்சேரி
போக்குவரத்து விதியை மீறிய 150 பேர் மீது வழக்கு
|17 July 2023 10:47 PM IST
புதுவையில் போக்குவரத்து விதியை மீறிய 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி கிழக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் இன்று மாலை ராஜா தியேட்டர் சந்திப்பு, அந்தோணியார் கோவில் சந்திப்பு, சோனாம்பாளையம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டி வந்த 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.