< Back
புதுச்சேரி
கல்லூரி மாணவிகளுக்கு தொழில் மேம்பாட்டு செய்முறை பயிற்சி
புதுச்சேரி

கல்லூரி மாணவிகளுக்கு தொழில் மேம்பாட்டு செய்முறை பயிற்சி

தினத்தந்தி
|
19 Aug 2023 9:39 PM IST

காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில், மாணவிகளுக்கு தொழில் மேம்பாட்டு செய்முறை பயிற்சி நடந்தது.

காரைக்கால்

காரைக்கால்மேடு அரசு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில், இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கண்ட்ரோல் என்ஜினியரிங் துறை சார்பில், இத்தாலி நாட்டு தொழில்நுட்பத்தின் ஆர்டுவனோ மைக்ரோகண்ட்ரோலர் பற்றிய திறன் மேம்பாட்டு செய்முறை பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சந்தானசாமி தலைமை தாங்கி ,'மாணவிகள் தங்கள் செய்முறை திறன்களை தற்போதுள்ள போட்டி உலகத்திற்கு ஏற்றவாறு திறமையை வளர்த்து கொள்ளவேண்டும். மேலும், கருத்தியல் பாடங்களை நன்கு புரிந்து படித்து அதன் மூலம் செய்முறைப்பாடத்தினை மிகச்சிறப்பாக பயின்று தங்கள் செய்முறை திறனை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியற்கல்லூரி பயோமெடிக்கல் என்ஜினீயரிங் துறைத்தலைவர் சதீஷ்குமார், விரிவுரையாளர் பாரதி, ஒருங்கிணைப்பாளர் விமலன் மற்றும் ராஜபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்