ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் பலி
|மட்டிக்கல்லி சேகரித்தபோது ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
அரியாங்குப்பம்
மட்டிக்கல்லி சேகரித்தபோது ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கார் டிரைவர்
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் புது காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). கார் டிரைவர். அவரது மனைவி மங்காவரம். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சிவக்குமார் வேலை இல்லாத நாட்களில் ஆற்றில் மட்டிக்கல்லி சேகரிப்பார்.
இன்று காலை தவளக்குப்பம் இடையார்பாளையம் அருகே உள்ள அலுத்த வேலி பகுதியில் சுண்ணாம்பாற்றில் மட்டிகல்லி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல்போட்டார்.
நீரில் மூழ்கி பலி
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தவளக்குப்பம் போலீசார் மயங்கிய நிலையில் இருந்த சிவக்குமாரை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிவக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.