< Back
புதுச்சேரி
காதல் கை கூடாத விரக்தியில் கார் டிரைவர் தற்கொலை
புதுச்சேரி

காதல் கை கூடாத விரக்தியில் கார் டிரைவர் தற்கொலை

தினத்தந்தி
|
30 Jun 2023 10:55 PM IST

காரைக்காலில் காதல் கை கூடாத விரக்தியில் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

காரைக்கால்

காதல் கை கூடாத விரக்தியில் கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

இளம்பெண்ணுடன் காதல்

காரைக்கால் பைபாஸ் சாலை தீன்ஸ் பார்க் பகுதியில் வசித்து வருபவர் முகமது கபீர். இவருக்கு 6 மகன்கள். இதில் 5-வது மகன் முகமது உசேன் (வயது22). கார் டிரைவராக உள்ளார். இவர் வீட்டின் அருகே வசித்து வந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்படவே அந்த இளம்பெண் குடும்பத்துடன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தார். இதனால் முகமது உசேன் அந்த பெண்ணின் நியாபகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் அனைவரும் வீட்டில் சாப்பிடும்போது, முகமது உசேன் மட்டும் சாப்பிடவில்லை. பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என கூறிவிட்டு மாடிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது முகமது உசேன் தகர கொட்டகையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் கை கூடாமல் போய் விடுமோ? என்ற விரக்தியில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்