< Back
புதுச்சேரி
பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவர் கைது
புதுச்சேரி

பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவர் கைது

தினத்தந்தி
|
25 Aug 2023 9:49 PM IST

தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியாங்குப்பம்

தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிளஸ்-1 மாணவி

புதுவை கோரிமேடு பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 43). கார் டிரைவர். இவர் தவளக்குப்பம் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

அந்த வீட்டில் உள்ள பிளஸ்-1 மாணவியை காலையில் பள்ளிக்கு கொண்டு சென்று விடுவதும், மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவதையும் கோபிநாத் வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வப்போது வெளியில் தனியாக அழைத்துச் செல்வதும் உண்டு.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் கோபிநாத் ஆசைவார்த்தை கூறி அந்த மாணவியை மயக்கியுள்ளார். மாணவியை தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மிரட்டி பணம், நகை பறித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாணவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால், அவரிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது கார் டிரைவர் கோபிநாத் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து மாணவி கூறியுள்ளார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறையில் அடைப்பு

இது தொடர்பாக கார் டிரைவர் மீது தவளக்குப்பம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்