< Back
புதுச்சேரி
புதுச்சேரி
புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாம்
|8 July 2023 10:14 PM IST
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் புற்றுநோய் அறுவை சிகிச்சை முகாம் நடந்தது.
காரைக்கால்
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மாதத்தில் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில், சிறப்பு மருத்துவ நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ஆலோசனை முகாம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருந்து சிறப்பு டாக்டர்கள் குழு காரைக்கால் வந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும், ஆலோசனைகளும் வழங்கினர். இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.