< Back
புதுச்சேரி
சாராயக்கடை முன்பு பயணியர் நிழற்குடை
புதுச்சேரி

சாராயக்கடை முன்பு பயணியர் நிழற்குடை

தினத்தந்தி
|
21 July 2023 10:10 PM IST

திருபுவனையில் சாராயக்கடை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருபுவனை

திருபுவனையில் சாராயக்கடை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாராயக்கடை முன்பு...

புதுச்சேரி-விழுப்புரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருபுவனையில் மேம்பாலத்தின் அருகில் கிராமப்புறங்களுக்கு செல்வதற்கு வசதியாக சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சர்வீஸ் சாலையில் பயணிகள் பஸ் ஏறுவதற்கு வசதியாக சாலையின் வடக்கு பகுதியில் கடைகளுக்கு நடுவே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் தெற்கு பகுதியில் சாராயக்கடை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு போதை ஆசாமிகளால் தொந்தரவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாராயக்கடை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் நலன்கருதி பயணிகள் நிழற்குடையை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்